எங்கள் குடும்பம் ஒரு சித்த மருத்துவ பாரம்பரிய குடும்பம். நான் பழனி திருகோயிலில் கடந்த 34 வருடங்களாக பணியாற்றி ஒய்வு பெற்று தனியாக சிறிய அளவில் சித்த மருத்துவ மனை நடத்தி வருகிறேன் . அதன் பெயர் கே .எஸ் .பதி சித்த மருத்துவ மனை என்பதாகும் . நான் எனது பணிக்காலத்தில் எனக்கு கிடைத்த மருத்துவ அனுபவங்கள் ,நூல் முறை (சாஸ்த்திரிய ) மருந்துகளின் செயல் பாடுகள் மற்றும் ,சித்தமருத்துவம் பற்றிய என் ஆரம்ப கால புரிதல்கள் காலம் செல்லச் ,செல்லச் ஏற்ப்பட்ட மாறுதல்களும் எனது சித்த மருத்துவ ஆய்வின் போதுபெறப்பட்ட தகவல்களையும் எனது பாரம்பரியத்தில் எனது தாத்தா எனது தந்தை ஆகிய வர்களின் மருத்துவ குறிப்புகள் யாவும் இத்தமிழ் மண் வாயிலாக பயனாளர் களைச் சென்று அடைய வழிவகை செய்யும் என்ற நல் நோக்கில் இதை தொகுக்கிறேன் .
அன்புடன் ,
கே .எஸ் . கந்தசுவாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக